வேறு ஒருவரை முதல்வராக அறிவிப்பேன் என ரஜினிகாந்த் கூறியதில் இருந்து அவருக்கும் எங்களுக்கும் எந்த முரணும் இல்லை என்று சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, வேறு ஒருவரை முதல்வராக அறிவிப்பேன் என ரஜினிகாந்த் கூறியதில் இருந்து அவர் மீதான எந்த முரணும் இல்லை.
அரசியலில் நான் கமல் ரஜினியை விட மூத்தவன். இந்த 10 ஆண்டுகளில் என் அளவிற்கு அவச்சொற்களை தாங்கியவர்கள் யாரும் இருக்க முடியாது.
அதையெல்லாம் ரஜினி தாங்கமாட்டார். அவர் புகழ்ச்சியை மட்டுமே பார்த்தவர், அவரை களமிறக்குபவனே திட்டுவான்.
நாங்கள் சந்திக்கின்ற உள்கட்சி பிரச்சினையை அவர் ஒருநாள் தாங்கமாட்டார். இந்த ஆட்டம் ரஜினிக்கு சரிவராது, அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.
இதில் களமிறங்கிவிடாதீர்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு இரவு கூட தூங்க விட மாட்டார்கள். ரஜினி வந்தால் நாங்கள் எதிர்கொள்ள தான் செய்வோம் என சீமான் தெரிவித்துள்ளார்.
மேலும், 2021 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் என சீமான் தெரிவித்துள்ளார்